சசெக்ஸ் மொழிபெயர்ப்பு சேவைகள் வழங்கும் இலவச உதவி, ஆதரவு மற்றும் தகவல் – தமிழில்
நீங்கள் 01273 234016 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் பெயர், தொலைபேசி எண், உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு ஆங்கிலம் அல்லது தமிழில் ஒரு செய்தியைத் தெரிவிக்கலாம். கூடிய விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம். அல்லது ‘வேறு தேவைக்கு எனக்கு மொழி உதவி வேண்டும்’ என்பதைக் கிளிக் செய்து பரிந்துரைப் படிவத்தை நிரப்பலாம்.
சமூக மொழிபெயர்ப்பாளர்கள்
உங்கள் சமூகப் பராமரிப்பு மற்றும் மருத்துவ அப்பாயிண்ட்மென்ட்களில் சார்பற்ற, துல்லியமான, இரகசியத் தன்மை காக்கப்படுகின்ற வகையில் மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குவார்கள்
தன்னார்வலர் மொழியியல் வல்லுநர்கள்
- அப்பாயிண்ட்மெண்ட்கள் பெற்றுத் தருதல், பிற சேவைகளைத் தொடர்புகொள்ள உதவுதல்
- கடிதங்களைப் படிக்க உதவுதல்
- உங்கள் சார்பாக தொலைபேசி அழைப்புகளைச் செய்து பேசுதல்
- சமூகக் குழுக்களுக்கு வருகைகள் தருதல்
பின்வருவனவற்றில் நிபுணத்துவம் கொண்ட சேவைகள் பற்றிய தகவலைக் கண்டறிய உங்களுக்கு உதவுவார்கள்:
- ஆரோக்கியமான வாழ்வு
- ஒருவரை கவனித்துக்கொள்ளுதல்
- உடல் இயலாமையுடன் வாழ்தல்
- வீடு
- பலன்கள், கடன் தொடர்பான ஆலோசனை
- சமூகப் பாதுகாப்பு
- ஆங்கில வகுப்புகள்
- குடியேற்றம் மற்றும் குடியுரிமை
- சமூகப் பராமரிப்பு
இருமொழி சமூக வழிகாட்டல்
இருமொழி சமூக வழிகாட்டல் என்பது, சமூகம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கவும், உங்கள் உடல்நலத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தவும் உதவக்கூடிய சமூக சேவைகள், அமைப்புகள், குழுக்கள் ஆகியவற்றுடன் உங்களுக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்ற, Brighton and Hove-இல் உள்ள ஒரு சமூக ஆலோசனை சேவையாகும்.
இந்த சேவை இரகசியத் தன்மை காக்கப்படும் வகையில் வழங்கப்படுகிறது. மேலும் எங்கள் தன்னார்வ மொழியியல் வல்லுநர்கள் மற்றும் சமூக மொழிபெயர்ப்பாளர்களுடன் நெருக்கமாகப் பணிபுரிகின்ற, முழுமையான பயிற்சி பெற்ற இருமொழி சமூக வழிகாட்டுநர்களால் வழங்கப்படுகிறது.
நட்பான இருமொழி தொலைபேசி உரையாடல்
ஒரு நண்பரிடம் தொலைபேசியில் பேசினால், தனிமை மற்றும் பிற சமூக மன அழுத்தங்களில் இருந்து விடுபட உதவியாக இருக்கும். உங்கள் மொழி தெரிந்த ஒரு தன்னார்வத் தொலைபேசி நண்பரை உங்களுக்காகக் கண்டறிந்து ஏற்பாடு செய்வோம். நீங்கள் அவரோடு அவ்வப்போது பேசலாம், ஒரு புதிய சமூக உறவைப் பெறலாம், தினசரி பிரச்சனைகளில் இருந்து உங்கள் மனதை திசைதிருப்பலாம்.