SIS (சசெக்ஸ் மொழிபெயர்ப்பு சேவைகள்) பொது தரவு செயலாக்க ஒழுங்குமுறைகளுக்கு (GDPR) இணங்கி, பின்வரும் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தும்:
• SIS சேவைகளை வழங்குவதற்கு (பேசுவதை மொழிபெயர்த்துக் கூறுதல் (இன்டர்ப்ரடேஷன்), மொழிபெயர்ப்பு, சமூக ஆலோசனைகள், இருமொழி வாதங்கள், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூக ஆராய்ச்சி)
• எங்கள் AGM அல்லது சேவைப் பயனர் தினம் (Service User Day) போன்ற SIS நிகழ்வுகளுக்கு உங்களை அழைப்பதற்கு
• உள்ளூர் சமூக உறுப்பினர்களுக்கான பிற நிகழ்வுகளுக்கு உங்களை அழைப்பதற்கு
• மொழிபெயர்க்கப்பட்ட தகவலை உங்களுக்கு அனுப்புவதற்கு
• உள்ளூர் சேவைகளைப் பற்றி ஆலோசிப்பதற்கு மற்றும் ஆலோசனைகளின் முடிவுகளைத் தெரிவிப்பதற்கு
உங்கள் தகவலைப் பார்க்க, புதுப்பிக்க அல்லது நீக்க நீங்கள் கோரலாம், SIS உங்களைத் தொடர்புகொள்வதை நிறுத்த வேண்டுமெனில் உங்கள் தாய்மொழியில் ஒரு செய்தி அனுப்பினால் போதும் (ஃபோன்: 01273 234016 அல்லது மின்னஞ்சல்: ben@sussexinterpreting.org.uk)
உங்கள் தகவலை பாதுகாப்பாக சேமித்து வைப்போம். உங்கள் ஒப்புதல் இல்லாமல் உங்கள் விவரங்களை மூன்றாம் தரப்பினருக்கு வழங்க மாட்டோம் (எங்கள் சேவைகளை வழங்க இது அவசியம் என்றால் தவிர). மேலும் தகவலுக்கு எங்கள் தனியுரிமை அறிக்கையைப் பார்க்கவும். நீங்கள் கோரினால் தனியுரிமை அறிக்கையின் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு வழங்கப்படும்.